வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-04-30 23:00 GMT
கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகரை சேர்ந்தவர் பன்னீர்(வயது 40). இவர் நேற்று காலை காரில் கடலூர் கேப்பர்மலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர், காரை வளாகத்தில் நிறுத்திவிட்டு அலுவலகத்துக்குள் சென்றார்.சிறிது நேரத்தில் காரின் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. அடுத்த சில நிமிடங்களில் கார் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. அப்போது லேசான காற்றுடன் வெயில் சுள்ளென அடித்ததால் தீ மளமளவென எரிந்தது. இதைப்பார்த்து அங்கு வந்த பொதுமக்கள் தண்ணீரை ஊற்றியும், மண்ணைவாரி தூவியும் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ அணையவில்லை.

இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்த தீயணைப்பு கருவிகளை ஊழியர்கள் எடுத்து வந்து தீயை அணைத்தனர். இதில் காரின் முன்பகுதி எரிந்துசேதம் ஆனது. தீ விபத்துக்கான காரணம் குறித்து கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தீ விபத்து சம்பவத்தால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்