நாளை நடைபெறவிருந்த பாஜக ஆலோசனை கூட்டம் ரத்து

நாளை நடைபெறவிருந்த பாஜக ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-04-28 15:19 GMT

சென்னை,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் நாளை (திங்கட்கிழமை) மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என தலைமைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நாளை நடைபெற இருந்த பாஜக ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்