கரூர் அருகே மாட்டுவண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; போலீஸ்காரர் சாவு

கரூர் அருகே மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-05-18 22:45 GMT
கரூர்,

கரூர் தொழிற்பேட்டை அருகே உள்ள சிலோன்காலனியை சேர்ந்தவர் மதன்ராஜ் (வயது 27). இவர், கோவையிலுள்ள பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவர், அயல்பணியாக ஒகேனக்கல் முகாமில் பணியாற்றினார். இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி விடுப்பில் தனது சொந்த ஊருக்கு அவர் வந்திருந்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் கரூரில் இருந்து புறப்பட்டு தனது நண்பரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் நெரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

விபத்தில் சாவு

நெரூர் ஒத்தக்கடை பகுதியில் சென்றபோது, அந்த வழியாக சென்ற மாட்டு வண்டி மீது எதிர்பாராதவிதமாக மதன்ராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த மதன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த மதன்ராஜின் உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்