குன்னூரில் நடந்த ஏலத்தில் தேயிலை தூள் ரூ.11¾ கோடிக்கு விற்பனை

குன்னூரில் நடந்த ஏலத்தில் தேயிலை தூள் ரூ.11¾ கோடிக்கு விற்பனை ஆனது.

Update: 2019-05-19 22:30 GMT
குன்னூர், 

நீலகிரி மாவட்டம் தேயிலை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் கம்பெனி தேயிலை எஸ்டேட் தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் தேயிலை தூள் குன்னூர் தேயிலை வர்த்தகர் அமைப்பு நடத்தும் தேயிலை ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஏலம் வாரந்தோறும் வியாழன், வெள்ளி இரு நாட்கள் நடைபெறுகின்றன. ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்து கொண்டு தேயிலை தூளை ஏலம் எடுக்கிறார்கள். இதன்படி கடந்த 16, 17-ந் தேதிகளில் ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு மொத்தம் 15 லட்சத்து 74 ஆயிரம் கிலோ தேயிலை தூள் வந்தது.

இதில் 10 லட்சத்து 2 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 5 லட்சத்து 72 ஆயிரம் கிலோ டஸ்ட்ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 78 சதவீத தேயிலை தூள் விற்பனையானது.

ஏலத்தில் 12 லட்சத்து 15 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் ரூ.11 கோடியே 85 லட்சத்துக்கு விற்பனையானது. அதிகமாக சி.டி.சி. தேயிலை தூள் கிலோ ரூ.171-க்கும், ஆர்.தோடக்ஸ் தேயிலை தூள் கிலோ ஒன்றுக்கு ரூ.241-க்கும் ஏலம் போனது.

இலை ரகத்தின் சாதாரண வகை கிலோ ஒன்றுக்கு ரூ.86-ல் இருந்து ரூ.90 வரைக்கும், விலை உயர்ந்த தேயிலை தூள் கிலோ ஒன்றுக்கு ரூ.112-ல் இருந்து ரூ.118 வரைக்கும் ஏலம் சென்றது.

டஸ்ட்ரகத்தின் சாதாரண வகை கிலோ ஒன்றுக்கு ரூ.84-ல் இருந்து ரூ.90-க்கும், விலை உயர்ந்த தேயிலை தூள் கிலோ ஒன்றுக்கு ரூ.116-ல் இருந்து ரூ.122-க்கும் ஏலம் போனது. அனைத்து ரக தேயிலை தூள்களும், கடந்த வாரத்தில் இருந்து இந்த வாரம் ரூ.2 விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்