அரிமளம் அருகே பெண்களுக்கான கபடி போட்டி

போட்டியில் சேலம், திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருச்சி, சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 14 அணிகள் கலந்து கொண்டன.

Update: 2019-05-22 22:45 GMT
அரிமளம்,

அரிமளம் ஒன்றியம், ராயவரம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர் திருவிழாவை முன்னிட்டு நகரத்தார்கள், வாசுகிபுரம் கிராமத்தார்கள், சிங்கப்பூர் வாழ் இளைஞர்கள், ஊர் பொதுமக்கள், சுதந்திர பறவை கபடிக்குழுவினர் ஆகியோர் இணைந்து பெண்களுக்கான கபடி போட்டி ராயவரம் அண்ணா சீரணி கலை யரங்க திடலில் நடைபெற்றது. அரிமளம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொன்.ராமலிங்கம் தலைமை தாங்கினார். கபடி போட்டியை ரகுபதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் சேலம், திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருச்சி, சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 14 அணிகள் கலந்து கொண்டன. முதல் பரிசை சேலம் அழகுசிவானி அணியினரும், இரண்டாம் பரிசை திருமயம் வெண்புறா அணியினரும், மூன்றாவது பரிசை திருச்சி ஹோலிகிராஸ் அணியினரும், நான்காம் பரிசை முசிறி எம்.ஜி.எம். அணியினரும் பெற்றனர். பின்னர் வெற்றிபெற்ற அணியினருக்கு நாகராஜன், மேகநாதன், பழனியப்பன், முருகேசன், கணேசன் உள்பட விழா குழுவினர் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினர். கபடி போட்டியை ஏராளமான ரசிகர்கள் கண்டு களித்தனர். 

மேலும் செய்திகள்