தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது; நிதி பகிர்வு சீராக இருக்க வேண்டும் - ஜெயக்குமார் பேட்டி

யானைப் பசிக்கு சோளப்பொறி என்பது போல மத்திய அரசு தமிழகத்திற்கு நிவாரண நிதியை ஒதுக்கியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Update: 2024-04-27 05:42 GMT

கோப்புப்படம் 

சென்னை,

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியும், வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக ரூ.397 கோடியும் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

முதல் கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் நிதியில் இருந்து ரூ.115.45 கோடியும், ரூ.397 கோடி வெள்ள பாதிப்பு நிதியில் இருந்து ரூ.160.61 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் யானைப் பசிக்கு சோளப்பொறி என்பது போல மத்திய அரசு தமிழகத்திற்கு நிவாரண நிதியை ஒதுக்கியுள்ளது என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் பேட்டியளித்த அவர் கூறும்போது, "தேசியக் கட்சிகளால் தமிழகத்திற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. மத்தியில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. என யார் ஆட்சியில் இருந்தாலும், தமிழகத்திற்கு நிதி தருவதில்லை. வடக்கிற்கு ஒரு நீதி; தெற்கிற்கு ஒரு நீதி என்பதை ஏற்க முடியாது. மத்திய அரசு குறைவாக நிதி அளித்துள்ளது.

யானைப் பசிக்கு சோளப்பொறி என்பது போல மத்திய அரசு தமிழகத்திற்கு நிவாரண நிதியை ஒதுக்கியுள்ளது. தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது. நிதி பகிர்வு சீராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்