விருத்தாசலத்தில் ரெயிலில் பாதுகாப்பாக பயணம் செய்வது குறித்த விழிப்புணர்வு பிரசாரம்
விருத்தாசலத்தில் ரெயிலில் பாதுகாப்பான பயணம் செய்வது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.;
விருத்தாசலம்,
ரெயிலில் பாதுகாப்பாக பயணம் செய்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் போலீசார் முன்னிலை வகித்தனர். இதில் ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடம் ரெயிலில் பாதுகாப்பான முறையில் பயணம் செய்வது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. அதில் பயணிகள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
அறிமுகம் இல்லாத நபர்கள் தரும் உணவு பொருட்களை வாங்கி சாப்பிடக்கூடாது, ஜன்னல் அருகில் நகைகள் வெளியில் தெரியும்படி அமரக்கூடாது, படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்யக்கூடாது, ஓடும் ரெயிலில் ஏறக்கூடாது, தண்டவாளங்களை கடக்கும் போது இரண்டு புறமும் பார்த்து ரெயில் வருகிறதா என்பதை பார்த்து விட்டு செல்லவேண்டும் என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கியிருந்தன. முன்னதாக காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முடிவில் தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்நாதன் நன்றி கூறினார்.