15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் நேற்று 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2019-06-10 22:30 GMT
நாமக்கல், 

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். மத்திய அரசு போன்று மருத்துவப்படி ரூ.1,000, ஒப்படைப்பு தொகை 40 சதவீதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நாமக்கல் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கருப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் வீரபத்ரன், பொருளாளர் ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது அரசு பணியாளர் போன்று குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.15 ஆயிரம் வழங்கிட வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்து அரசு பஸ்களிலும் 50 சதவீத பயண கட்டணச்சலுகை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு அரசு செலவில் அடையாள அட்டை வழங்க வேண்டும். மத்திய அரசு போன்று முழு ஓய்வூதியம் பெற குறைந்தபட்ச பணிக்காலம் 20 ஆண்டுகள் என நிர்ணயம் செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்