தோகைமலை ஒன்றியத்தில் 3 ஏரிகளின் மதகுகள்-கரைகள் பலப்படுத்தும் பணி தொடக்கம்

தோகைமலை ஒன்றியத்தில் 3 ஏரிகளின் மதகுகள்-கரைகள் பலப்படுத்தும் பணி தொடங்கியது.

Update: 2019-07-15 22:15 GMT
தோகைமலை, 

கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம், அய்யர்மலை அருகே உள்ள பாப்பக்காபட்டி ஊராட்சியில் பொதுபணி துறையின் பராமரிப்பில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து வெளியேறும் நீரால் 105 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்தநிலையில் தமிழக அரசின் பொதுப்பணி துறை நீர்வள ஆதார அமைப்பின் கீழ் 2019-20-ம் ஆண்டுக்கான குடிமராமத்து திட்டம் மூலம் ரூ.25 லட்சம் மதிப்பில் ஏரியின் மதகுகள் மற்றும் கரையை பலப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை திருச்சி பொதுப் பணி துறை அரியாறு வடி நில கோட்ட உதவி பொறியாளர் முரளிதரன் தொடங்கி வைத்தார். இதில் பாப்பக்காபட்டி ஏரியின் பாசன விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தோகைமலை அருகே உள்ள கழுகூர் ஏரியில் ரூ.25 லட்சம் மதிப்பில் மதகுகள் மற்றும் கரையை பலப்படுத்தும் பணியையும், புத்தூர் ஏரியின் மதகுகள் மற்றும் கரையை ரூ.25 லட்சத்தில் பலப்படுத்தும் பணியையும் தொடங்கி வைத்தார். இதில் கழுகூர் மற்றும் புத்தூர் ஏரி பாசன விவசாயிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்