சேலத்தில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க கோரி சேலத்தில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
சேலம்,
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850-ஐ வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம், அகவிலைப்படி, மருத்துவபடி, மருத்துவ காப்பீடு போன்ற ஓய்வுகால பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வையாபுரி, சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தங்கவேலன், மாநில செயலாளர் கணேசன் உள்பட ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர் கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வடிவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசின் சத்துணவு திட்டத்தில் 35 ஆண்டுகளுக்கு மேலாக உழைப்பை அர்ப்பணித்து ஓய்வு பெற்றுள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு சிறப்பு ஓய்வூதியமாக மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுவது அவர்தம் வாழ்க்கை தேவைக்கு போதுமானதாக இல்லை. இதனால் அவர்கள் கோவில்கள் மற்றும் தேவாலயங்கள் முன்பு பிச்சை எடுக்கும் அவல நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.
எனவே, குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850-ஐ வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை அரசிடம் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தற்போது மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். இதன்பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.