கனமழை எச்சரிக்கையால் தேக்கடிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
கனமழை எச்சரிக்கையால் தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது.;
தேக்கடி,
குமுளியை அடுத்துள்ளது தேக்கடி ஏரி. இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரியில் படகு சவாரி வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக அளவு ஆர்வம் கொள்வார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.
இந்தநிலையில் இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்யும், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதற்காக சிவப்பு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன்காரணமாக தேக்கடிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்தது.
நேற்று வாரவிடுமுறை என்ற போதிலும் தேக்கடிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. இதனால் தேக்கடி ஏரி வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் படகுகள் கரைப் பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்ட பின்பு தான் தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.