பழுது நீக்குவதாக கூறி 20 பேட்டரிகளை விற்றவர் கைது

தேனியில், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் உள்ள 20 பேட்டரிகளை பழுது நீக்குவதாக கூறி வாங்கி சென்று விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-20 22:15 GMT
தேனி,

தேனியில், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் உள்ள 20 பேட்டரிகளை பழுது நீக்குவதாக கூறி தேனியை சேர்ந்த சபரிவேல் ராஜன் என்பவர் வாங்கி சென்றார். குறிப்பிட்ட நாளில் மீண்டும் வந்து பேட்டரிகளை அவர் ஒப்படைக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த தொழிலாளர் உதவி ஆணையர் ராஜகுமார் தேனி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், 20 பேட்டரிகளை சபரிவேல்ராஜன் விற்பனை செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தார்.

மேலும் செய்திகள்