போரிவிலி ரெயில் நிலையம் அருகே பெண்களிடம் நகைப்பறித்த தந்தை, மகன் பிடிபட்டனர் ரூ.7 லட்சம் நகைகள் பறிமுதல்

போரிவிலி ரெயில்நிலையம் அருகே நகைப்பறிப்பில் ஈடுபட்டு வந்த தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-25 22:45 GMT
மும்பை,

போரிவிலி ரெயில்நிலையம் அருகே நகைப்பறிப்பில் ஈடுபட்டு வந்த தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

நகைப்பறிப்பு

மும்பை போரிவிலி ரெயில் நிலையம் அருகே தனியாக செல்லும் பெண்களிடம் நகைப்பறிப்பு சம்பவம் அடிக்கடி நடந்து வருவதாக போலீசில் புகார் வந்தது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது நகைப்பறிப்பில் ஈடுபட்ட கும்பல் சென்ற மோட்டார் சைக்கிளின் பதிவெண் தெரியவந்தது. அந்த எண்ணை வைத்து நடத்திய விசாரணையில், டெல்லியை சேர்ந்த சுனில் ராஜ்புத் (வயது30) என்பவர் பிடிபட்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

ரூ.7 லட்சம் நகைகள் பறிமுதல்

இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில், நகைப்பறிப்பில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் ராஜ்குமார் (51) மற்றும் அவரது மகன் ஆசு மால்வட் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்