தூத்துக்குடியில், மீன்வளக்கல்லூரி மாணவர்கள் முழங்காலிட்டு போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுயநிதி மீன்வளக்கல்லூரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மாணவர்கள் முழங்காலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-11 22:00 GMT
தூத்துக்குடி,

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் மீன்வள பல்கலைக்கழகம் சார்பில் சுய நிதி மீன்வளக் கல்லூரி அமைக்கப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மீன்வளக்கல்லூரி மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு மனு அனுப்பினர். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் 11 பேரை கல்லூரி நிர்வாகம் விடுதியில் இருந்து 6 மாதம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சுயநிதி கல்லூரி தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விடுதியில் இருந்து 11 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும் மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கல்லூரிக்கு காலவரையற்ற விடுப்பு அறிவிக்கப்பட்ட நிலையிலும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று காலையில் மாணவ-மாணவிகள் கல்லூரி முன்பு முழங்காலிட்டு போராட்டம் நடத்தினர். 3 மாணவர்கள் முகத்தில் வண்ணங்களை பூசியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் தொடர் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் செய்திகள்