போக்குவரத்து விதிகளை மீறியதாக சேலத்தில் ஒரே நாளில் 1,585 பேர் மீது வழக்குப்பதிவு

போக்குவரத்து விதிகளை மீறியதாக சேலத்தில் ஒரே நாளில் 1,585 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-09-13 23:15 GMT
சேலம்,

சேலத்தில் விபத்துகளை குறைக்கும் வகையில் மாநகர போலீசார் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுவதால் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து விதிமுறைகள் மீறுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மாநகர போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் உத்தரவிட்டார்.

அதன்பேரில், நேற்று முன்தினம் மாநகரின் பல இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 331 பேர், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 16 பேர், இருசக்கர வாகனங்களில் ‘ஹெல்மெட்’ அணியாமல் சென்ற 681 பேர் உள்பட மொத்தம் 1,585 பேர் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாநகரில் விபத்துகளை குறைக்க போலீசாரின் இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும் போக்குவரத்து விதிமுறைகள் மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்