மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 12 பேரிடம் ஒரே நாளில் ரூ.1¼ லட்சம் அபராதம் வசூல் போலீசார் நடவடிக்கை

மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 12 பேரிடம் ஒரே நாளில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை போலீசார் அபராதமாக வசூலித்தனர்.

Update: 2019-09-29 23:00 GMT
நாகப்பட்டினம்,

‘ஹெல்மெட்’ அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் அந்த வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற விதியை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராதம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களை போலீசார் நவீன கருவி மூலம் கண்டறிந்து, அவர்களின் பெயர், முகவரி, வாகன பதிவு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ‘ஸ்வைப்பிங் மிஷினில்’ பதிவு செய்து வருகிறார்கள்.

ஒரே நாளில்...

இந்த நிலையில் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நேற்று வாஞ்சூர் சோதனை சாவடியில் நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஒருநாளில் மட்டும் 12 பேர் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி வந்தது தெரியவந்தது. அவர்கள் 12 பேரிடமும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்