விருத்தாசலத்தில், தையல் பயிற்சி நிறுவனத்தில் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விருத்தாசலத்தில் தையல் பயிற்சி நிறுவனத்தில் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-09-29 22:15 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலம் கல்லூரி சாலையை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவர் தனது வீட்டின் முன்புறத்தில் தையல் பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் தையல் பயிற்சி முடிந்ததும், நிறுவனத்தை பூட்டிவிட்டு செந்தில்குமார் சென்றார். இதைத்தொடர்ந்து நேற்று தையல் பயிற்சி நிறுவனத்தை திறக்க சென்றார். அப்போது நிறுவனத்தின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் நிறுவனத்துக்குள் சென்று பார்த்தபோது, அங்கு கல்லாபெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.4 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள தையல் பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் செந்தில்குமார் பயிற்சி நிறுவனத்தை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில், அந்த நிறுவனத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்து திருடிச்சென்றது தெரிந்தது. தொடர்ந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, அதன் மூலம் தையல் பயிற்சி நிறுவனத்தில் திருடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்