புதுச்சேரி-கடலூர் உயர் மறை மாவட்ட பேராயரை மு.க.ஸ்டாலின் சந்தித்தார்

புதுச்சேரி-கடலூர் உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயரை மரியாதை நிமித்தமாக மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

Update: 2019-10-17 22:45 GMT
புதுச்சேரி,

புதுவை காமராஜ் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஜான்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக நேற்று பிற்பகல் வந்த மு.க.ஸ்டாலினுக்கு கோரிமேடு எல்லையில் தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து அக்கார்டு ஓட்டலில் ஓய்வெடுத்த மு.க.ஸ்டாலின் மாலையில் காமராஜ் நகர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்ய புறப்பட்டார். அப்போது மிஷன் வீதியில் உள்ள பேராயர் இல்லத்திற்கு சென்று அங்கு புதுச்சேரி-கடலூர் உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயரை மரியாதை நிமித்தமாக மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

இதன்பின் சாரம் தென்றல் நகர், ரெயின்போ நகர், கிருஷ்ணாநகர், சாமிப்பிள்ளைதோட்டம் ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்று மு.க.ஸ்டாலின் பேசினார். அவருக்கு ஆங்காங்கே மலர்தூவி வரவேற்பு அளித்தனர். மாலை 6.15 மணிக்கு தொடங்கிய மு.க.ஸ்டாலின் இரவு 8.10 மணிக்கு தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டார். இந்த பிரசாரத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், வைத்திலிங்கம் எம்.பி., துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா, எஸ்.பி.சிவக்குமார், நாஜிம், எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், ஜெயமூர்த்தி, கீதா ஆனந்தன், விஜயவேணி, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் சஞ்சீவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்