பஸ் கண்ணாடி உடைப்பு சம்பவத்தில் பா.ஜனதா நிர்வாகி கைது

பஸ் கண்ணாடி உடைப்பு சம்பவத்தில் பா.ஜனதா நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-11-08 22:00 GMT
சிவகங்கை,

சிவகங்கை அருகே பனங்காடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 38), இவர் கடந்த மாதம் 7-ந்தேதி சிவகங்கையில் உள்ள கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்ற வழக்கில் ஆஜரானார். பின்னர் அவர் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பினார்.

அப்போது சிவங்கை நகர் திருப்பத்தூர் ரோட்டில் வந்த போது ஒரு கும்பலால் வழி மறித்து வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரின் உடல் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

அப்போது அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தேவகோட்டையை அடுத்த பப்பனி கிராமத்தை சேர்ந்த தென்னரசு என்பவர் வந்தார். ( இவர் ராஜசேகர் கொலை வழக்கில் கைது செய்யபட்டுள்ளார்.) அவரை மருத்துவமனை அருகில் கொலை செய்யப்பட்ட ராஜசேகரின் ஆதரவாளர்கள் தாக்கி, அவர் வந்த காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.

தொடர்ந்து மறுநாள் நடைபெற்ற கொலையாளிகளை கைது செய்யக் கோரி நடந்த சாலை மறியலில் அந்த வழியாக வந்த ஒரு பஸ்சின் கண்ணாடி அடித்து ெநாறுக்கப்பட்டது.

இதுதொடர்பாக சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் ஆகியோர் தனித்தனியாக 2 வழக்குகள் பதிவு செய்தனர். அதன்பேரில் இந்த அசம்பாவித சம்பவங்களில் தொடர்புடையதாக சிவகங்கை நகர் பா.ஜனதா தலைவர் தனசேகரனை போலீசார் கைது செய்து, அவரை புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்