நெல்லித்தோப்பு மார்க்கெட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது

நெல்லித்தோப்பு மார்க்கெட்டில் 2-வது முறையாக மேற்கூரையின் காரை பெயர்ந்து விழுந்தது.

Update: 2019-11-09 22:45 GMT
புதுச்சேரி,

புதுவை நெல்லித்தோப்பில் நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட் மீன், இறைச்சி, மற்றும் காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன.

இந்த கட்டிடம் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீன்மார்க்கெட்டின் கூரை பகுதியில் உள்ள காரை பெயர்ந்து விழுந்ததில் மீன் விற்கும் பெண்கள் 2 பேர் காயமடைந்தனர்.

காரை பெயர்ந்து விழுந்தது

அப்போதே புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் மீண்டும் மீன் மார்க்கெட்டின் மேற்கூரை காரை பெயர்ந்து விழுந்தது. நல்லவேளையாக அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லாததால் காயம் எதுவும் ஏற்படவில்லை.

காலையில் மீன் விற்கும் பெண்கள் அங்கு வந்தபோதுதான் இந்த விவரம் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

மலர் மாலை

இதனிடையே மார்க்கெட் கட்டிடத்தை புதியதாக கட்டித்தரக்கோரியும் எந்த நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி அடைந்த சில பெண்கள் காரை பெயர்ந்து இடத்தில் மலர்மாலையை வைத்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்