மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்

ஆவடியில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்.

Update: 2019-11-11 22:30 GMT
ஆவடி,

மின்கம்பம் நடுவது, அதன்மீது ஏறி மின்சார கோளாறுகளை சரிசெய்வது உள்ளிட்ட பணிகளை செய்ய ‘கேங்மேன்’ என்ற பணியிடத்தை புதிதாக மின்வாரியம் உருவாக்கி உள்ளது. இதில் பயிற்சி இல்லாத புதிய நபர்களுக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

இதனால் நன்கு பயிற்சி பெற்ற, ஒப்பந்த ஊழியர்களின் வேலை உறுதித்தன்மை பறிபோகிறது எனக்கூறி தமிழகம் முழுவதும் நேற்று மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே நேற்று காலை 50-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், தினசரி 380 ரூபாய் கூலி வழங்கவேண்டும். ‘கேங்மேன்’ பணி முறையை ஒழிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஆவடி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்