கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் ரேஷன்கடை பணியாளர்கள் கைது

கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட ரேஷன்கடை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-11-14 22:15 GMT
சிவகங்கை, 

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட ரேஷன்கடை பணியாளர் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அதில் பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும். கூட்டுறவுத்துறை கட்டுபாட்டில் உள்ள ரேஷன் கடை பணியாளர்களுக்கு நுகர் பொருள் வாணிப கழகத்தில் உள்ள பணியாளர்களுக்கு வழங்குவது போன்ற ஊதியம் வழங்க வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும் பணிவரன்முறை செய்யாத பணியாளர்களுக்கு உடனடியாக பணிவரன்முறை செய்ய வேண்டும். பழுதடைந்த சாக்கு பைகளுக்கு பணியாளர்களிடம் பணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இதையொட்டி ஏற்கனவே மாவட்ட அளவில் கண்டன ஆா்பாட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது. தொடர்ந்து நேற்று மறியல் போராட்டம் மாநில துைண தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் முத்துச்சாமி, தலைவர் மாயாண்டி, பொருளாளர் திருஞானம், துைண தலைவர்கள் சின்னையா, பாலகிருஷ்ணன், சேதுராமன் உள்பட 40 பேரை சிவகங்கை போலீஸ் நகர் இன்ஸ்பெக்டர் நீலாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் ஆகிேயார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்