மாணவர்கள் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன் கல்வி பயிலவேண்டும் கடலோர காவல்படை அதிகாரி வேண்டுகோள்

மாணவர்கள் தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சியுடன் கல்வி பயிலவேண்டும் என்று கடலோர காவல்படை அதிகாரி கூறினார்.

Update: 2019-11-20 22:30 GMT
காரைக்கால்,

காரைக்காலை அடுத்த பூவம் காமராஜர் அரசு உயர்நிலைப்பள்ளியில், மாணவர்களின் கல்வி திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, காரைக்கால் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் வின்சென்ட் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் பொன் சவுந்தரராஜ் வரவேற்றார்.

தொடர்ந்து, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கடலோர காவல்படை அதிகாரி நாகேந்திரன் பேசியதாவது:-

வாழ்வில் முன்னேற்றம் காண தொலைநோக்கு சிந்தனை அவசியம். குறிப்பாக, மாணவர்கள் நவீன செல்போனை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் அறிவுறைகளை அவசியம் கேட்கவேண்டும். இருவரும், நல்லதை மட்டுமே போதிப்பார்கள். மாணவர்கள் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன் கல்வி பயிலவேண்டும்.நல்ல மாணவர்களாக திகழ வேண்டியது இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் அவசியம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மரக்கன்று

நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் நெல்சன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். அதனை தொடர்ந்து காரைக்கால் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தால் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. ஆசிரியர் செல்வம் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கீதா, ஸ்ரீபிரியா, உடற்கல்வி ஆசிரியர் மனோகரன், நூலாசிரியர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்