பேராவூரணியில் ரூ.3½ கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் துரைக்கண்ணு-வைத்திலிங்கம் எம்.பி. வழங்கினர்

பேராவூரணியில் ரூ.3½ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் வழங்கினர்.

Update: 2019-11-30 23:00 GMT
பேராவூரணி,

தமிழக முதல்-அமைச்சர் சிறப்பு குறைதீர் திட்டத்தின்கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று பேராவூரணி விநாயகா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல் வரவேற்று பேசினார். பேராவூரணி கோவிந்தராசு எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

விழாவில் அமைச்சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.3 கோடியே 59 லட்சத்து 54 ஆயிரத்து 737 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில் அமைச்சர் பேசியதாவது:-

மக்களை தேடிச்சென்று...

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் மேட்டூர் அணை பல முறை நிரம்பி ஊர் முழுவதும் பச்சைபசேல் என காட்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் தான் ரூ.7150 கோடிக்கு மேல் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். விழாவில் வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:-

மக்களை தேடி சென்று 900 முகாம்கள் நடத்தப்பட்டு 24 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசை தேடி மக்கள் வராமல் மக்களை தேடிச்சென்று அரசு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. திருஞானசம்பந்தம், தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் மதியழகன், மாணவரணி செயலாளர் கோவி.இளங்கோ, முன்னாள் மாநில கயிறு வாரிய தலைவர் எஸ்.நீலகண்டன், ஒன்றிய செயலாளர்கள் பேராவூரணி துரைமாணிக்கம், சேதுபாவாசத்திரம் சிவ.மதிவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் கிளாட்ஸ்டன் பு‌‌ஷ்பராஜ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்