ஸ்ரீவில்லிபுத்தூரில் பக்தர்கள் வசதிக்காக நடமாடும் கழிப்பறை அமைக்க கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூரில் பக்தர்கள் வசதிக்காக நடமாடும் கழிப்பறை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-11-30 23:00 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் தமிழக அரசின் சுற்றுலா நகரமாக திகழ்கிறது. வைணவ திருத்தலமான ஆண்டாள் கோவில், சித்தர்கள் வாழ்ந்த சதுரகிரி மலை, தென்திருப்பதி எனப்படும் திருவண்ணாமலை ஆகிய முக்கிய இடங்களும் இப்பகுதியில் உள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலையின் அழகிய பொதிகை மலை குற்றாலம் சென்று வரும் சுற்றுலா பயணிகளும், வருடந்தோறும் அய்யப்பன் கோவிலுக்கு சென்று வரும் பக்தர்கள், சபரிமலைக்கு சென்று வரும் வழியில் ஆண்டாள் கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம். தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ரதவீதியில் போக்குவரத்து போலீசார் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் வாகனங்களை நிறுத்த சொல்வதால் அங்கு இருந்து ஆண்டாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சன்னதி தெரு சந்து வழியாக வருகின்றனர்.

சன்னதி தெரு சந்தில் இரண்டு பக்களிலும் வாருகால் இருப்பதால் அதில் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. இவ்வழியாக வரும் பக்தர்களும்,சுற்றுலா பயணிகளும் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் மிகவும் பாதிப்படைகின்றனர். பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் சிரமம் இல்லாமல் இருக்க உடனடியாக நடமாடும் கழிப்பறை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்