ஓசூரில் ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல்; 3 பேர் கைது

ஓசூரில் ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-12-10 23:00 GMT
ஓசூர்,

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் இருந்து கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழியாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுகிறதா? என்று கண்காணிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவிட்டார்.

அவருடைய உத்தரவின் பேரில் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கு தலைமையில் சிப்காட் போலீசார் கோவிந்தஅக்ரஹாரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரை போலீசார் சோதனை செய்தனர்.

3 பேர் கைது

அதில் காரில் 159 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 19 மூட்டைகள் மற்றும் 16 பெட்டிகளில் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இது தொடர்பாக கிரு‌‌ஷ்ணகிரி சப்-ஜெயில் சாலை ஜித்தேந்தர் (வயது 22), உக்காராம் (34), கிரு‌‌ஷ்ணகிரி குப்பண்ணா தெரு முக்தியார் (30) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள், ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்