ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும், காளைகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்

ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகளின் விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார். ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

Update: 2019-12-24 22:45 GMT
ஈரோடு, 

ஈரோடு அருகே பவளத்தாம்பாளையம் கிராமத்தில் உள்ள ஏ.ஈ.டி. பள்ளிக்கூட வளாகத்தில் வருகிற 18-ந்தேதி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது.

ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தங்களது காளைகளை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வகையிலும்,பொதுமக்கள் கண்டுகளிக்கவும், காங்கேயம் இனம் காளைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும், இந்த இனக்காளைகளை வளர்ப்போரை ஊக்குவிக்கும் வகையிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் காளைகளின் விவரங்களை https://forms.gle/8xbWZwezGsXuHYAD8 என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியமாகும்.

எனவே காளைகளின் உரிமையாளர்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தகம் அல்லது கால்நடை மருத்துவமனைகளை அணுகி தங்களது காளைகள் குறித்து தேவைப்படும் விவரங்களை அளித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படாத காளைகள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்