மனு கொடுக்க வந்த பொதுமக்களுக்கு இலவச இயற்கை உரம் - மதுரை மாநகராட்சி கமிஷனர் வழங்கினார்

மதுரை மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களுக்கு இலவசமாக இயற்கை உரத்தினை மதுரை மாநகராட்சி கமிஷனர் விசாகன் வழங்கினார்.

Update: 2019-12-24 22:00 GMT
மதுரை, 

மதுரை மாநகராட்சி மண்டலம்-4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாநகராட்சி கமிஷனர் விசாகன் தலைமையில் நேற்று நடந்தது. இந்த முகாமில் குடிநீர், பாதாள சாக்கடை, வீட்டு வரி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, சொத்து வரி பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 37 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து இருந்து பெறப்பட்டன.

இந்த மனுக்கள் மீது ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். மேலும் கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கமிஷனர் ஆய்வு செய்தார்.

முன்னதாக மனு கொடுக்க வந்த பொதுமக்களுக்கு மாநகராட்சி கமிஷனர் தலா 2 கிலோ இயற்கை உரத்தினை இலவசமாக வழங்கினார். அதனை வீட்டுத்தோட்டங்களில் பயன்படுத்த வேண்டும் என்றும், வீடுகள் முன்பு மரம் வளர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மாநகராட்சியின் ஒருங்கிணைந்த புகார் மையத்தின் மூலம் பெறப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கூறினார்.

இதில் துணை கமிஷனர் நாகஜோதி, உதவி கமிஷனர் பழனிசாமி, செயற்பொறியாளர்கள் (திட்டம்) ரங்கநாதன், முருகேச பாண்டியன், உதவி செயற்பொறியாளர் குழந்தைவேலு, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்