குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக, பா.ஜனதா நிர்வாகிகள் வீடுகள் முன்பு கோலம் போட்டனர்

குடியுரிமைதிருத்த சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜனதா நிர்வாகிகள் தங்கள் வீடுகள் முன்பு கோலம் போட்டனர்.

Update: 2019-12-30 23:00 GMT
கோவை,

மத்திய அரசு கொண்டு வந்துஉள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்குஎதிராக பல்வேறுஅமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கோவையில்தி.மு.க.மகளிரணிசார்பில்இந்த சட்டத்துக்குஎதிராக கோலம் போட்டு போரா ட்டத்தில்ஈடுபட்டனர்.

இந்த சட்டத்துக்குஆதரவாகபா.ஜனதா நிர்வாகிகள் தங்கள் வீடுகளின் முன்பு கோலம் போட்டனர்.கவுண்டம்பாளையம்பகுதியை சேர்ந்தபா.ஜனதா செயலாளர்பிரீத்திலட்சுமி தலைமையிலானநிர்வாகிகள் வீடுகள் முன்பு கோலம் போட்டனர்.

கோவையை அடுத்தஇடையர்பாளையம்,கே.என்.ஜி.புதூர்,டி.வி.எஸ். நகர்,என்.ஜி.ஜி.ஓ. காலனி மற்றும் அதைச்சுற்றிஉள்ள பகுதிகளில்வீடுகள் முன்பு கோலம்போடப்பட்டது.அந்த கோலத்தில்குடியுரிமைதிருத்த சட்டம்வேண்டும்,தேசிய குடிமக்கள்பதிவேடு வேண்டும் என்றும் எழுதப்பட்டு இருந்தது.

இதுதவிர கோவையில்உள்ளபா.ஜனதா நிர்வாகிகள் தங்கள் வீடுகள் முன்பும்இந்த சட்டத்துக்குஆதரவாக கோலம்போட்டனர்.

இதுகுறித்துபா.ஜனதா நிர்வாகிகள்கூறும்போது, நமது நாட்டில் உள்ளசிறுபான்மையினமக்களிடம் நாங்கள் உறவினர்கள் போன்று பழகி வருகிறோம். குடியுரிமைதிருத்த சட்டம்,தேசிய குடிமக்கள்பதிவேட்டால் நமது நாட்டை சேர்ந்த யாருக்கும்எவ்வித பாதிப்பும்இல்லை. வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நமதுநாட்டுக்குள் நுழைந்து உள்ளவர்களுக்குதான் பாதிப்பு. ஆனால் இந்த சட்டம் தவறான முறையில் மக்களிடம் பரப்பப்பட்டு வருகிறது என்றனர்.

மேலும் செய்திகள்