பரங்கிப்பேட்டையில், ஜனநாயக எதிர்ப்பு போராட்டக் குழுவினர் ஆர்ப்பாட்டம்

பரங்கிப்பேட்டையில் இந்திய ஜனநாயக எதிர்ப்பு போராட்டக் குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2020-02-29 03:45 IST
பரங்கிப்பேட்டை, 

பரங்கிப்பேட்டை ஜனநாயக எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் பரங்கிப்பேட்டை வண்டிக்கார தெருவில் உள்ள தபால் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி நகர செயலாளர் ப‌ஷீர் அகமது தலைமை தாங்கினார். தி.மு.க. நகர செயலாளர் முனைவர் உசேன், ஒன்றிய வர்த்தக அணி தலைவர் சங்கர், சமூக ஆர்வலர் அருள் முருகன், காமு கவுஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் அமித்பேரோஜ், மாவட்ட செயலாளர் ஹமீது ஹவுஸ் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மற்றும் பா.ஜனதா அரசை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும் கோ‌‌ஷம் எழுப்பப்பட்டது.இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் இப்ராகிம், நகர காங்கிரஸ் ஆதம் மாலிக், முன்னாள் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஆரிப், முகமது யூசுப், ஜாகீர் உசேன், அஸ்ஸலாம் லியாகத் அலி, முகமதுவாலித் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் செய்யது அலி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்