நாகை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 15 குடிநீர் நிறுவனங்களுக்கு ‘சீல்'

நாகை மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட 15 குடிநீர் நிறுவனங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

Update: 2020-02-29 23:00 GMT
நாகை,

நாகை மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி குடிநீர் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி வரலட்சுமி தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், ஊழியர்கள் குடிநீர் நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டனர்.

நாகப்பட்டினம், வேதாரண்யம், மயிலாடுதுறை, கொள்ளிடம், திருமருகல், திட்டச்சேரி, வேளாங்கண்ணி, சீர்காழி, செம்பனார்கோவில் ஆகிய இடங்களில் உள்ள குடிநீர் நிறுவனங்களில் சோதனை நடைபெற்றது.

‘சீல்’ வைப்பு

இந்த சோதனையின்போது நாகை மாவட்டத்தில் மொத்தம் 15 குடிநீர் நிறுவனங்கள் உரிய அனுமதியின்றி செயல்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அந்த 15 குடிநீர் நிறுவனங்களுக்கும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். 

மேலும் செய்திகள்