ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

Update: 2020-03-01 23:00 GMT
பென்னாகரம்,

சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இதனிடையே கர்நாடக கே.எஸ்.ஆர். அணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,500 கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது. இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.

பரிசலில் சென்றனர்

இந்நிலையில் நேற்றும் வினாடிக்கு 2,500 கனஅடி தண்ணீரே ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டு இருந்தது. இதனிடையே வாரவிடுமுறையான நேற்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளித்தனர்.

பின்னர் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்