மனு கொடுக்க வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் - கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் மறியல்

மனு கொடுக்க வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-03-02 22:15 GMT
சிவகங்கை,

மானாமதுரை தாலுகா ஆலடிநத்தம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கோவில் பிரச்சினை தொடர்பாக மாவட்ட கலெக்டரை சந்திக்க வந்தனர். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது.

இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனைவரையும் உள்ளே விட மறுத்தனர். இதை கண்டித்து கிராம மக்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து அவர்களை சமாதானம் செய்த போலீசார் 20 பேரை மட்டும் உள்ளே அனுமதிப்பதாக கூறியதை தொடர்ந்து சமாதானம் அடைந்து சாலை மறியலை கைவிட்டு திரும்பிச்சென்றனர்.

பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தனை சந்தித்து தங்கள் கோரிக்களை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கலெக்டர், சிவகங்கை ஆர்.டி.ஓ.வை அழைத்து இது தொடர்பாக சமரச கூட்டம் நடத்த உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்