வெளிநாட்டுக்கு ரூ.2 கோடி அமெரிக்க டாலர் கடத்த முயற்சி; கூரியர் நிறுவன இயக்குனர்கள் 3 பேர் கைது

செருப்புகளில் மறைத்துவைத்து வெளிநாட்டுக்கு ரூ.2 கோடி அமெரிக்க டாலர் கடத்த முயன்ற சம்பவத்தில் கூரியர் நிறுவன இயக்குனர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-03-03 23:16 GMT
மும்பை,

கூரியர் பார்சல்கள் மூலம் மும்பையில் இருந்து வெளிநாடுகளுக்கு வௌிநாட்டு பணம் அதிகளவில் கடத்தப்படுவதாக சிறப்பு விசாரணை மற்றும் புலனாய்வு பிரிவினருக்கு (எஸ்.ஐ.ஐ.பி.) ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிகாரிகள் சம்பவத்தன்று மும்பை சுங்க மண்டலம் 3-ல் உள்ள கூரியர் டெர்மினலில் இருந்து வெளிநாட்டுக்கு அனுப்பப்பட இருந்த பார்சல்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் அங்கிருந்த பார்சல்களில் செருப்புகளில் மறைத்து வைத்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ரூ.2 கோடியே 7 லட்சம் அமெரிக்க டாலர் கடத்தப்பட இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இரு கூரியர் நிறுவன இயக்குனர்களான முரளிதரன் கோபால் நாயர், மனிஷ் நாயர், ராஜீவ் நாயர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்