வணிக நிறுவனங்களில் கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்; நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்

வணிக நிறுவனங்களில் கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

Update: 2020-03-06 23:12 GMT
வலங்கைமான்,

வலங்கைமானில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் குற்றங்கள் தடுப்பு மற்றும் விபத்துகள் முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வலங்கைமான் பகுதியில் குற்றங்கள் மற்றும் விபத்துகள் நடைபெறாமல் இருக்க பொதுமக்கள், வணிகர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் போலீசாருக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். ஊரக பகுதிகளில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சாலை விபத்துகளை தடுக்க மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். காரில் செல்பவர்கள் சீட் பெட் அணிந்து செல்ல வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. சாலை வீதிகளை மீறாமல் வாகனங்களை இயக்க வேண்டும். வணிக நிறுவனங்களில் கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்