கோவில்பட்டி அருகே கலால் துறை அதிகாரி வி‌ஷம் குடித்து தற்கொலை பணிநீக்கம் செய்யப்பட்டதால் விரக்தி

கோவில்பட்டி அருகே பணிநீக்கம் செய்யப்பட்டதால் விரக்தி அடைந்த கலால் வரித்துறை அதிகாரி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-03-24 22:30 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே பணிநீக்கம் செய்யப்பட்டதால் விரக்தி அடைந்த கலால் வரித்துறை அதிகாரி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கலால் வரித்துறை அதிகாரி 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லட்சுமிபுரம் மேல காலனியைச் சேர்ந்தவர் பரசுராமன் (வயது 59). இவர் கோவில்பட்டியில் மத்திய கலால் வரித்துறை அலுவலகத்தில் தலைமை ஹவில்தாராக பணியாற்றி வந்தார். இவர் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனால் பரசுராமன் விரக்தி அடைந்து காணப்பட்டார். அவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரை குடும்பத்தினர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

வி‌ஷம் குடித்து தற்கொலை 

இந்த நிலையில் கோவில்பட்டியை அடுத்த சாலைப்புதூரில் உள்ள புளிய மரத்தின் அடியில் பரசுராமன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, கோவில்பட்டி மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, தற்கொலை செய்த பரசுராமனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட பரசுராமனுக்கு சாந்தி (55) என்ற மனைவியும், கார்த்திக் (29) என்ற மகனும், திவ்யா (25) என்ற மகளும் உள்ளனர். கார்த்திக், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். திவ்யாவுக்கு திருமணமாகி விட்டது.

மேலும் செய்திகள்