மராட்டியத்தில் 96 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு - ஒருவர் பலியான பரிதாபம்

மராட்டியத்தில் 96 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் ஒரு போலீஸ்காரர் பலியானார்.;

Update:2020-04-26 04:50 IST
மும்பை,

மராட்டியத்தில் கொடிய கொரோனா பிடியில் இருந்து மக்களை பாதுகாக்கும் சுகாதார பணியாளர்கள், போலீசாரையும் அது விட்டு வைக்கவில்லை. இங்கு இதுவரை 96 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 15 பேர் போலீஸ் அதிகாரிகள் ஆவர்.

பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைக்கு பிறகு 3 போலீஸ் அதிகாரிகள் மற்றும் 4 போலீஸ்காரர்கள் தொற்று பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

போலீஸ்காரர் பலி

இதற்கிடையே மாநில தலைநகர் மும்பையில் போலீஸ்காரர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். வக்கோலா போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த 57 வயது போலீஸ்காரரான அவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கஸ்தூர்பா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மும்பையில் போலீஸ்காரர் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்தது போலீசார் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்