பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் யு.ஜி.சி.க்கு மந்திரி உதய் சாமந்த் கோரிக்கை

மராட்டியத்தில் பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு மந்திரி உதய் சாமந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-05-20 23:41 GMT
மும்பை,

மராட்டியத்தில் விஸ்வரூபம் எடுத்து வரும் கொரோனா பிரச்சினைக்கு மத்தியில் பல்கலைக்கழக தேர்வுகளை நடத்துவதில் குழப்பம் நீடித்து வருகிறது.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் மாநில உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை மந்திரி உதய் சாமந்த் மாணவர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மராட்டியத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்யுமாறு பல்கலைக்கழக மானியக் குழுவிடம் (யு.ஜி.சி.) கோரிக்கை விடுத்துள்ளேன்.

அதன்படி தேர்வு ரத்து செய்யப்பட்டால் மாநிலம் முழுவதும் சுமார் 8 முதல் 10 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். தற்போதைய சூழ்நிலையில் தேர்வுகளை நடத்த முடியாது. எனவே இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து, தர நிர்ணய முறையின்படி மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என கடிதம் எழுதி இருக்கிறேன்.

இருப்பினும் துணைவேந்தர்கள் உள்ளிட்டோருடன் விரிவான ஆலோசனை நடத்திய பின்னர் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும்.

மாவட்ட அளவில் நடத்தப்பட்ட தொழில்முறை படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவு தேர்வை (சி.இ.டி.) தாலுகா மட்டத்தில் நடத்துவோம். இதன் மூலம் சமூக விலகலை கடைபிடிக்க முடியும். தேர்வு மையத்தை மாணவர்கள் மாற்றிக் கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்

மேலும் செய்திகள்