திருச்சியில் சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.23 கோடி மோசடி வியாபாரிகள் போலீசில் புகார்

திருச்சியில் சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.23 கோடிவரை மோசடி செய்யப்பட்டதாக போலீசில் வியாபாரிகள் நேற்று புகார் அளித்தனர்.

Update: 2020-06-18 00:30 GMT
திருச்சி,

திருச்சி மன்னார்புரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு நேற்று காலை 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் திரண்டு வந்து, புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “திருச்சி காந்திமார்க்கெட், தாராநல்லூர், இ.பி.ரோடு, தேவதானம், கருவாட்டுப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் வியாபாரிகளான எங்களிடம், அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து சீட்டு நிறுவனம் நடத்தி பணம் வசூல் செய்தார்.

ரூ.23 கோடி மோசடி

நாங்கள் சில ஆண்டுகளாக சேமித்து வைத்து இருந்த பணத்தை அவரிடம் செலுத்தி வந்தோம். முழுத்தொகையை செலுத்திய பிறகு, எங்களுடைய சீட்டு தொகையை திரும்ப கேட்டபோது, அவர் தர மறுத்ததோடு, தகாத வார்த்தைகளால் பேசினார்.

இதுவரை ரூ.23 கோடி வரை வியாபாரிகளிடம் மோசடி செய்து இருக்கலாம் என தெரிகிறது. ஆகவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும்” என்று கூறி இருந்தனர். 

மேலும் செய்திகள்