ராணிப்பேட்டையில், தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் - அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்

ராணிப்பேட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

Update: 2020-06-20 22:00 GMT
சிப்காட் (ராணிப்பேட்டை), 

ராணிப்பேட்டை நகராட்சி மற்றும் இந்தியன் வங்கியின் வேலூர் மண்டல அலுவலகம் சார்பில், கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு, 200 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் சு.ரவி, சம்பத், சிறுபான்மை பிரிவு மாநில இணைச் செயலாளர் முகம்மதுஜான் எம்.பி., ராணிப்பேட்டை நகர செயலாளர் என்.கே.மணி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம்.சி.பூங்காவனம், வாலாஜா மேற்கு ஒன்றிய செயலாளர் பெல் தமிழரசன், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் சுகுமார், வேலூர் மண்டல இந்தியன் வங்கி பொது மேலாளர் மாயா, ராணிப்பேட்டை முன்னோடி வங்கி மேலாளர் விஜயராஜா உள்பட வங்கி அதிகாரிகள், நகராட்சி அலுவலர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்