மராட்டியத்தில் புதிதாக 5 ஆயிரத்து 257 பேருக்கு கொரோனா 181 பேர் பலி

மராட்டியத்தில் புதிதாக 5 ஆயிரத்து 257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 181 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2020-06-30 00:54 GMT
மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக நோய் பரவல் வேகம் தீவிரமடைந்து உள்ளது. இதில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 257 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் தொடர்ந்து 4-வது நாளாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வைரஸ் நோயால் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 69 ஆயிரத்து 883 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோல மாநிலத்தில் மேலும் 181 பேர் உயிர்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை மராட்டியத்தில் 7 ஆயிரத்து 610 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மும்பையில் 1,226 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நகரில் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 765 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் 92 பேர் பலியானதால் நகரில் ஆட்கொல்லி ேநாய்க்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 463 ஆக அதிகரித்து உள்ளது. மும்பையில் தற்போது 28 ஆயிரத்து 749 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் குணமடைந்துவிட்டனர்.

இதேபோல நேற்று தானே மாநகராட்சி பகுதியில் புதிதாக 380 பேருக்கும், தானே புறநகரில் 200 பேருக்கும், நவிமும்பை மாநகராட்சியில் 234 பேருக்கும், கல்யாண் டோம்பிவிலியில் 513 பேருக்கும், உல்லாஸ்நகரில் 137 பேருக்கும், பிவண்டியில் 131 பேருக்கும், வசாய் விராரில் 287 பேருக்கும் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மராட்டியத்தில் மற்ற பகுதிகளில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் மற்றும் அடைப்புக்குறிக்குள் பலியானவர்கள் விவரம் வருமாறு:-

தானே மாநகராட்சி- 9,644 (315 பேர் பலி), தானே புறநகர்- 4,438 (65), நவிமும்பை மாநகராட்சி- 7,677 (177), கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி- 7,068 (83), உல்லாஸ் நகர் மாநகராட்சி- 1,792 (35), பிவண்டி மாநகராட்சி- 1,987 (71), மிரா பயந்தர் மாநகராட்சி- 3,366 (125), வசாய் விரார் மாநகராட்சி- 4,493 (89), ராய்காட்- 1,781 (42),

பன்வெல் மாநகராட்சி- 2,199 (53). மாலேகாவ் மாநகராட்சி- 1,087 (81). நாசிக் மாநகராட்சி- 2,195 (88), புனே மாநகராட்சி- 17,223 (634), பிம்பிரி சின்ஞ்வட் மாநகராட்சி- 2,399 (48), சோலாப்பூர் மாநகராட்சி- 2,321 (242), அவுரங்காபாத் மாநகராட்சி- 4,189 (225), நாக்பூர் மாநகராட்சி- 1,265 (13).

மேலும் செய்திகள்