ஜி.எஸ்.டி.- மின் கட்டணம் செலுத்துவதில் 6 மாதத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தல்

ஜி.எஸ்.டி.- மின் கட்டணம் செலுத்துவதில் 6 மாதத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2020-06-30 22:15 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கத்தின் தலைவர் ஓம்சக்தி உதயகுமார் மாவட்ட தொழில் மையத்தின் பொதுமேலாளரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மத்திய மற்றும் மாநில அரசுகளால் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. சில மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தாலும், தொழில்களை நடத்துவதில் நடைமுறை சிக்கல்கள் இருந்து வருகின்றன. 

ஊரடங்கிற்கு முன்பு இருந்ததை போல தொழில் வாய்ப்புகள் அல்லது ஆர்டர்கள் கிடைக்காமல் தொழில் முனைவோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் அனைத்து வகையான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் முடங்கிப்போய் உள்ளன. தொழில்கள் செயல்படாத காரணத்தால், சிறு தொழில் நிறுவனங்களும் மின்சார கட்டணத்தை செலுத்துவதில் இருந்தும், ஜி.எஸ்.டி. வரிவசூல் செய்வதில் இருந்தும் 6 மாதத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்.

ஊரடங்கு காலத்தில் முடங்கியுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி பெறுவதற்கு கட்டாயம் அரசின் உதவி அவசியம் தேவைப்படுகிறது. ஆகவே அனைத்து தொழில்புரிவோருக்கும் வங்கிகளில் சொத்து பிணையம் இல்லாமல் குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்