9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச் சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-07-16 06:06 GMT
பெரம்பலூர்,

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். அண்ணாமலை, பழனி யாண்டி, சத்தீஸ்வரி, கண்ணகி ஆகியோர் கண்டன உரை யாற்றினர். கொரோனா பர வலை கருத்தில் கொள்ளாமல் ஊரகத் திட்ட பணிகளை விரைந்து முடிக்க நிர்ப்பந்திப் பதை கைவிட வேண்டும். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிடவும், பாதிக்கப்பட் டுள்ள வளர்ச்சி துறை அலு வலர்களுக்கு உரிய மருத்துவ வசதிகள் வழங்கிடவும் வேண்டும்.

கோவை மாவட்ட 4 ஊழியர்களின் மாவட்ட மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும். கொரோனா தடுப்பு பணிகளுக்காக உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் செலவினங்களை பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங் களை எழுப்பினர்.

வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நடத்திய ஆர்ப் பாட்டத்திற்கு வேப்பூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சித்தார்த்தன் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண் டவர்கள் 9 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங் களை எழுப்பினர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டம்) செல்வகுமார் நன்றி கூறினர்.

இதே போல் ஜெயங்கொண் டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் அரியலூர் மாவட்ட பொரு ளாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் கார்த்தி கேயன், பழனிசாமி, நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட தலைவர் சிபிராஜா கண்டன உரை யாற்றினார். ஆர்ப்பாட்டத் தில் கலந்து கொண்டவர்கள் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்சாமி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்