அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள் மும்முரம்: குளங்களுக்கு மார்ச் மாதம் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை அதிகாரி தகவல்

அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதையடுத்து அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரி தெரிவித்தார்.

Update: 2020-07-31 05:50 GMT
அவினாசி, 

அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிக்கு கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவினாசியில் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தார். அதை தொடர்ந்து டெண்டர் விடப்பட்டு நீரேற்று நிலையங்கள், குழாய் பதிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் பணிகள் நடைபெறுவது தாமதமானது.இதையடுத்து கடந்த ஒரு மாதமாக திட்டப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் நீரேற்று நிலையங்கள் அமைக்கும் பணி 50 சதவீதம் முடிவடைந்துள்ளது. குழாய் பதிக்கும் பணி 80 சதவீதம் முடிவடைந்துள்ளது.

தண்ணீர் நிரப்ப நடவடிக்கை

எனவே அடுத்தகட்டப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு (2021) மார்ச் மாதம் இறுதிக்குள் இந்த திட்டத்தில் பயன் பெறும் குளம், குட்டைகளுக்கு தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்