விருதுநகர் மாவட்டத்தில், 424 பேருக்கு கொரோனா; 3 பேர் பலி - பாதிப்பு எண்ணிக்கை 9,804 ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 424 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை 9,804 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

Update: 2020-08-05 04:15 GMT
விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 71,667 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 9,380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 8,834 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இதில் 6,339 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 7 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 428 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 1300 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 424 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சிவகாசி சித்துராஜபுரத்தை சேர்ந்த 68 வயது நபர், பள்ளபட்டியை சேர்ந்த 55, 30, 43, 33, 60 வயது பெண்கள், பி.கே.எம். தெருவை சேர்ந்த 33 வயது பெண், மேலத்தெருவை சேர்ந்த 22 வயது பெண், முண்டக நாடார் தெருவை சேர்ந்த 17, 18 வயது பெண்கள், நேரு காலனியை சேர்ந்த 18 வயது பெண், சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றும் 33 வயது நபர், விளாம்பட்டியை சேர்ந்த 55 வயது பெண், பராசக்தி காலனியை சேர்ந்த 63 வயது மூதாட்டி, சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 36 வயது போலீஸ்காரர், திருத்தங்கலை சேர்ந்த 50,35 வயது பெண்கள் உள்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த 33 பேர், மூவரைவென்றான் கிராமத்தை சேர்ந்த 3 பேர், கட்டையதேவன்பட்டியை சேர்ந்த 20 பேர், கூமாபட்டியை சேர்ந்த 15 பேர், அயன்செவல்பட்டியை சேர்ந்த 5 பேர், கீழசெல்லையாபுரத்தை சேர்ந்த 10 பேர், இ.டி.ரெட்டியபட்டியை சேர்ந்த 5 பேர், மொட்டமலை அகதிகள் முகாமை சேர்ந்த 5 பேர், பானாங்குளத்தை சேர்ந்த 3 பேர், சுந்தரபாண்டியத்தை சேர்ந்த 6 பேர், குன்னூர் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பணியாற்றும் 37 வயது பணியாளர், நத்தம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் 28,38 வயது நபர்கள், கல்குறிச்சியை சேர்ந்த 10 பேர், வத்திராயிருப்பு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 36 வயது போலீஸ்காரர், பெரியபுளியம்பட்டியை சேர்ந்த 3 பேர், ராஜபாளையத்தை சேர்ந்த 10 பேர், காரியாபட்டி, மல்லாங்கிணறு, ரெங்கப்பநாயக்கன்பட்டி, முடியனூர், இருக்கன்குடி, கடையம்பட்டி, சத்திரரெட்டியபட்டி, எம்.நாகலாபுரம், இலந்தகுளம், மம்சாபுரம், பெரியபுளியம்பட்டியை சேர்ந்த 10 பேர், விருதுநகர் அல்லம்பட்டி அவ்வையார் தெரு, இடுப்பன் தெரு, அகமதுநகர், டி.என்.பட்டியை சேர்ந்த 5 பேர், சின்னமூப்பன்பட்டியை சேர்ந்த 5 பேர் உள்பட 424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 9,804 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் சிகிச்சையில் இருந்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனா பரிசோதனையில் தெரிவிக்கப்பட்ட முடிவில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கிராம பகுதிகளை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் கிராமப்பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்