புறக்கடை கோழி வளர்ப்புத்திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வினியோகம் - கலெக்டர் தகவல்

புறக்கடை கோழி வளர்ப்புத்திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வினியோகம் என்று கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-24 22:45 GMT
ராணிப்பேட்டை, 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை 2020-2021-ம் ஆண்டில் விலையில்லா புறக்கடை கோழி வளர்ப்புத்திட்டத்தின் கீழ் விலையில்லா நாட்டு இன அசில் கோழிகள் மொத்தம் 7 ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 400 பெண் பயனாளிகள் வீதம் மொத்தம் 2 ஆயிரத்து 800 பயனாளிகளுக்கு தலா 25 கோழிகள் வீதம் மொத்தம் 70 ஆயிரம் கோழிகள் வழங்கப்பட உள்ளன. அதற்கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், கடந்த ஆண்டுகளில் விலையில்லா கோழிகள் பெறாதவர்கள், பிற திட்டங்களால் பயன் பெறாதவர்கள் அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் மூலமாக வேலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர், ராணிப்பேட்டை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

தேர்வு செய்யப்படும் பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்