387 பேருக்கு கொரோனா; 460 பேர் குணமடைந்தனர்

புதுவையில் நேற்று புதிதாக 387 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 460 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

Update: 2020-09-29 23:23 GMT
புதுச்சேரி,

புதுவையில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்ததையடுத்து கடந்த சில வாரங்களாக கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டது. அதன்படி நாள்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உமிழ்நீர் பரிசோதனை நடத்தப்படுகிறது.

நேற்று காலை 10 மணி யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 596 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 387 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 460 பேர் குண மடைந்து உள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2 நாட்களாக இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 79 ஆயிரத்து 780 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 1 லட்சத்து 49 ஆயிரத்து 327 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 27 ஆயிரத்து 66 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களில் 4,933 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 1,762 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 3,171 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 21,616 பேர் குணமடைந்துள்ளனர்.

2 பேர் பலி

புதுவையில் இதுவரை 517 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 438 பேர் புதுச்சேரியை சேர்ந்தவர்கள். 37 பேர் காரைக்காலையும், 41 பேர் ஏனாமையும் சேர்ந்தவர்கள் ஆவர். புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நைனார்மண்டபம் சுதானாநகர் பகுதியை சேர்ந்த 68 வயது முதியவரும், அரியாங்குப்பம் ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்த 70 வயது முதியவரும் பலியாகி உள்ளனர். புதுவையில் உயிரிழப்பு 1.91 சதவீதமாகவும், குணமடைவது 79.86 சதவீதமாகவும் உள்ளது.

மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்