அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2020-10-28 02:59 GMT
புதுச்சேரி, 

நிலுவையில் உள்ள 11 மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை உடனடியாக வழங்கவேண்டும், 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கவர்னர் மாளிகையை முற்றுகையிட திட்டமிட்டு இருந்ததையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். கைதான ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் கோரிமேடு போலீஸ் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் சிறிதுநேரத்தில் விடுவித்த போது அவர்கள் விடுதலையாக மறுத்தனர். இதைத்தொடர்ந்து கூட்டமைப்பு நிர்வாகிகளான சேஷாச்சலம், மார்ட்டின் கென்னடி உள்ளிட்டோரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அதை ஏற்காமல் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களிடம் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. நேரில் சென்று கோரிக்கைகள் குறித்து கேட்டு, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

மேலும் செய்திகள்