குளித்தலை பகுதியிலுள்ள அஞ்சலகங்களில் தமிழ்மொழி இடம் பெற்ற விண்ணப்பப் படிவங்களை பயன்படுத்தகோரி மனு

குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில், குளித்தலை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நேற்று மனு ஒன்று அளிக்கப்பட்டது.

Update: 2020-11-06 00:16 GMT
குளித்தலை, 

குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில், குளித்தலை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நேற்று மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில், குளித்தலை பகுதி மக்கள் நீண்டகாலமாக குளித்தலை தலைமை அஞ்சலகத்தில் வாடிக்கையாளராக இருந்து வருகின்றனர். அஞ்சலகங்கள் பயன்பாட்டு நடைமுறைகள் போன்றவைகளில் ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே உள்ளது. தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்ட இந்தப் பகுதி மக்களுக்கு இது மிகுந்த இடர்பாட்டையும், நேரவிரயத்தையும் ஏற்படுத்துவதோடு தவறான செயல்பாட்டிற்கும் வழிவகுக்கிறது. ஆகையால் குளித்தலை தலைமை அஞ்சல் நிலையத்திலும், குளித்தலை வட்ட பகுதியில் உள்ள அனைத்து கிராம அஞ்சலகங்களில் உள்ள பயனர் பயன்பாட்டு (விண்ணப்ப) படிவங்களில் தமிழ் மொழியின் பயன்பாட்டை உறுதிசெய்ய ஆவண செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்