கோர்ட்டில் ஆஜராகாமல் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 5 பேர் கைது

கோர்ட்டில் ஆஜராகாமல் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2020-12-01 04:22 IST
வி.கைகாட்டி,

அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் கோப்பிலியன்குடிகாடு கிராமத்தை சேர்ந்த மகேந்திரன்(வயது 27), செந்தில் (30), திருமுருகன் (35), ரமேஷ் (37), முருகேசன் (53) உள்ளிட்ட 5 பேர் மீது அடிதடி தொடர்பான வழக்குகள் உள்ளன. இந்நிலையில் இவர்கள் 3 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தனர்.

இதனையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்யும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில் கயர்லாபாத் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அவர்களை தேடி வந்தனர்.

கைது

இந்நிலையில் விளாங்குடி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது 5 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் போலீசார் தேடி வந்த மகேந்திரன், செந்தில், திருமுருகன், ரமேஷ், முருகேசன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்